Saturday, August 19, 2006

NATURE POEMS

this is full of poems about nature..have a look.

1.எங்கே அவள்?
IN SEARCH OF MY GAL...
சுடும் வெயில்
வியர்வை அருவி
நெடுஞ்சாலை
மக்கள் கூட்டம்
காதை பிளக்கும்
வாகன சத்தம்
இது
என் நகர வாழ்க்கை
அவளைத் தொலைத்ததால்
நகரும்
நரக வாழ்க்கை!


காட்டுக்குள் சென்றேன்
என் காதலியைத் தேடி!


மலை முகடு...
அதை உரசிச் செல்லும் மேகக்கூட்டம்
மேகக்கூட்டத்தில்...அவள்


புல்வெளி..
புல்லின் மீது கீரிடமாய் பனித்துளி
பனித்துளியில் அவள்


காலைச்சூரியன்...
அவன் கரம் பட்டு சிவக்கும் செவ்வானம்
செவ்வானத்தில் அவள்


காட்டு அருவி
அவன் பாறையுடன் மோதுகையில் தெறிக்கும் சாரல்
சாரலில்...அவள்


உறையும் பனி
அதில் யாரும் அறியாமல் காதை வருடும் தென்றல்
தென்றலில்...அவள்


கார்மேகம்
மழையாய் பூமியைத் தொட தவிக்கையில் எழும் மண்வாசனை
மண்வாசனையில் அவள்


அழகிய பூக்கள்
அதோடு வண்டுகள் பேசும் காதல் வசனம்
காதல் வசனத்தில்...அவள்!


ஒற்றையடிப்பாதை
அங்கே அழைப்புமணியாய் குயிலோசை
குயிலோசையில்...அவள்


எங்கும் அவள்
பச்சைப்பட்டு உடுத்தி
என்னைப் பார்த்து
பரவசமாய் சிரித்தாள்
என் காதலியின்
கரம் பற்றாமல்
கண்ணீரோடு
காட்டைவிட்டு பிரிந்தேன்
என் நகர வாழ்க்கை நோக்கி

என் மனதில்
அவள் நினைவுகள்
கண்மூடினால்
கண் சிமிட்டுகிறாள் அவள்
என் காதலி-இயற்கை















2.AT THE END OF THE DAY-I MET HER


அந்தி வேலைப் பொழுது
அலுவல் முடிவு
அயர்ந்த உடலில்
வியர்வை பூக்கள்
படிகளில் தொங்கியே பல்லவன் பயணம்
முரட்டு வாகனம்
மிரட்டும் சாலையில்
மூக்கை உரசியது
அவள் வாசனை
அண்ணாந்து பார்த்தேன்
கரிய கூந்தலுடன்
என் இனிய காதலி
மெல்ல குனிந்து
முத்தங்கள் பொழிந்தாள்
என்னைத் தீண்டிய
என் செல்ல மழையே

Tuesday, August 15, 2006

my mosted wanted favourites

vivek oberoiதேவதையின் காதலன்



i wrote this long back during tsunami time.vivek did a great job in adopting those villages.this poem maynt suit at this time..anyway jus have a look at it.


மனித நேயப் போர்வையில் நடிக்கும்
மனிதர்கள் மத்தியில்
நடிகன் நீ
மனிதனாய் வாழ்கிறாய்


ஊர் தெரியாது மொழி தெரியாது
ஏன்
உன்னையே தெரியாது பலருக்கு
நீயோ
உணர்வுகள் தெரிந்து
உயிர் ஊட்டுகிறாய்

ஒருவர் ஒருவரைத் தத்தெடுக்கலாம்
நீயோ ஊரையே தத்தெடுக்கிறாய்

ஐஸ்வர்யா ராய் ஐஸ்கீரிம் தேவதை
கண்மூடினால் வரும் கனவு தேவதை
தேவதைக் கிடைக்க
வரம் பெற வேண்டும்


இங்கு தேவதையே
வரம் பெற்றிருக்கிறாள்
நீ காதலனாய் கிடைப்பதற்கு!







SANIA MIRZA-so chweet

குட்டி புயலே சானியா
எங்கும் உந்தன் mania
நீ ultra modern ராணியா இல்லை
ஆளை நொறுக்கும் சுனாமியா??
மூக்குத்தி போட்ட madonna நீ
மோதிப் பார்த்தால் maradonna நீ
கலக்கலான cocacola நீ
கலக்கிப்புட்ட எங்க இதயத்தை நீ
hyderabad halwa நீ
high tech ஆன rasagula நீ
வானத்தை பிடிக்கும் ஜெட்டா நீ
எப்படி பிடித்தாய் rankயை நீ

twinkle twinlke little star
நீ தான் எங்க super star

Monday, August 14, 2006

நீயும் நானும்
its a bday poem for my dear mother.



கடல் சிப்பியா நீ
சிப்பிக்குள் முத்தா நான்?
உன் முத்தக்கடலில் என்னை ஏன்
முழ்கடித்தாய்

பூமியா நீ
அதில் புதையலா நான்?
உன்னைத் தோண்டி என்னை ஏன்
பெற்றெடுத்தாய்

இயேசுவா நீ
யூதாஸா நான்?
உன்னை மார்பில் உதைத்தால் ஏன்
அணைத்துக்கொண்டாய்?



மெழுகுவர்த்தியா நீ
அதில் தீபமா நான்?
உன்னைக் கரைத்து எனக்கு ஏன்
உணவளித்தாய்?

கடவுளா நீ
உன் பக்தனா நான்?
உன் அருள் முகம் காட்டி என்னை ஏன்
ஆட்டிப்படைக்கிறாய்?

உனக்குள் பலபேர்
அம்மா,அக்கா,தோழி என்று
வந்துபோகிறார்கள்
நான் வேண்டும்போதெல்லாம்

உனக்கே தெரியாமல்
உன்னிடம் ஓரு பொக்கிஷம்
ரகசியம் காதைக் கொடு
உன் உள்ளங்கை தான்



என்சிரிப்பு,சந்தோசம்,துக்கம்,தூக்கம்
அனைத்துக்கும் தீர்வு
உன் உள்ளங்கை தான்


உன்னால் நான் பிறந்தேன்
உனக்கோ இன்று தான் பிறந்தநாள்
தேய்பிறையில் தேயிந்தாலும் நிலவு நிலவுதானே
வயதானலும் என்றும் நீ என் உயிர்தானே

உன் இதய லப்டப் ஓசை ஏன் மெதுவாக கேட்கிறது?
என் கணம் தாங்காமலா?
போதும் நீ என்னை சுமந்தது
இனி நான் உன்னைச் சுமக்கிறேன்


இப்போதெல்லாம் அடிக்கடி கோவிலுக்கு போகிறேன்
மறு ஜென்மம் உண்டாமே?
உண்டேன்றால்
மறுபடியும் வேண்டுமே
எனக்கு நீ அம்மாவாக!!

Sunday, August 13, 2006

குட்டி தேவதை
hi all!! this poem is about a new born baby ..this baby has a rare disease called arthrogryposis multiplex congenita with spina bifida..becoz of this,the baby is almost vegetative..the most sad part is..the babys parents refused to ve it..and finally they have given it to an orphanage..this has happened few months back and unfortunately i saw tat sweet little doll in neonatal unit before goin to orphanage..the baby was so sweet like a rose petal..i dnt knw how the mother accepted to give it for orphanage..i was emotionally upset on tat day..ofcourse, i controlled myself..all i can do for tat sweet little angel is... this small poem..jus go through it and pray for the baby..god bless u



குட்டி தேவதை

பட்டு வண்ண ரோஜாவை
சின்ன சின்ன துண்டாக்கி
நெய்து தைத்த ஆடையோ?
உன் பட்டு தேகம் கண்ணம்மா?

குட்டி குட்டி காம்போடு
விட்டு விட்டு அடுக்கிய
மல்லிகை மொட்டோ?
உன் பிஞ்சு விரல் செல்லம்மா?

கண்ணே!கண்மணியே!
கைகால் இழந்த தேவதையே!
முற்று பெறாத காவியமே
குருடன் வரைந்த ஓவியமே

முத்து சிற்பமே உன்னை
பாதியிலே விட்டுவிட்ட
அந்த
பிரம்மனும் குருடனோ?

மத்தவங்க தள்ளினா
அம்மாவை அணைச்சுக்கலாம்
அம்மாவே உதறினால்
எங்கே போவாயோ என் செல்லமே

தங்க பொக்கிஷத்தை
வீதியிலே விட்டுவிட்டாள்
வீதியிலே விட்டாலும்
தங்கம் தங்கம் தானே

அம்மா இல்லை என்று ஆழாதேடா தங்கமே
உன்னைத் துறந்ததால்
அவள்
அம்மாவே இல்லையடா!!
காதல் கவிதைகள் -this is my first attempt towards romantic poems.read and post ur comments


கனவே கனவே
என் கனவெல்லாம் நீயே
இடியாய் இறங்கி
இதயத்தை உடைத்தாய்

அசுரனே வந்தாலும்
அசராத என்னை
சிறு புன்னைகையாலே
வெட்டி சாய்த்தாய்

நீ நடக்கும் வீதியில்
தூசு இருக்காது
நீ வருவாய் என்று
நூறு முறை நான் கடந்து போவதால்

நீ இருக்கும் இடத்தில்
வெயில் இருக்காது
நிழலாய் உன்னை நான்
தொடருந்து வருவதால்!!

நீ தூக்கி ஏறியும் குப்பைக்குக்கூட
கால் இருக்கிறது
என் அறையில் எப்படியோ அது குடி புகுவதால்

நீ வீசும் பார்வை என்னிடம்
வட்டி கேட்கிறது
என்இதய வங்கியில்
அதை சேமிப்பதால்!!

என் வீட்டு கண்ணாடி
பொய் சொல்கிறது
அதில் என்னைக் காணாமல்
உன்னைக் காண்பதால்

என் வீட்டு சுவருக்கு
வாய் இருக்கிறது
எப்போதும் அதில்
உன் குரல் கேட்பதால்

அடிப்பட்டாலும் இப்போதெல்லாம் அழுவதில்லை நான்
என் கண்ணீர் துளிகளை சேமிக்கிறேன்
உன் பாதம் கழுவ

அடிக்க தோன்றினாலும் யாரையும் அடிப்பதில்லை நான்
என் உள்ளங்கையை பாதுகாக்கிறேன்
உன் பாதம் தாங்க

உன் பார்வை தூண்டிலில் தவிக்கும் மீன் நான்
ஆனால் இன்னும் தூண்டிலைத்தான் காதலிக்கிறேன்
என்னைத் தூண்டு தூண்டாக்கிவிட்டு
நீயோ தூரமாய் போகிறாய்

தூக்கத்தை தொலைத்து நான் திருடனாய் விழிக்க
உன்னிடம் கொடுக்காத என் காதல் கடிதங்கள்
சுகமாய் தூங்குகின்றன
என் படுக்கை அறையிலே