Wednesday, September 27, 2006

COMEDY TIME
this is full of funny poems to read and have fun







1.சாலையில்
குனிந்த தலை நிமிரவில்லை
கீழேநூறு ரூபாய் நோட்டு

2.பேருந்து நின்றது
இறங்க மனம் இல்லை
சில்லறை பாக்கி

3.காலில் தான் கீறல்
முழு உடல் பரிசோதனை
நோய் ஓன்றுமில்லை பர்சிலும்தான்

4.உடல் பருமன்
எனக்குள் கவலை
தீர்வு கிடைத்தது
கல்லூரி விடுதியில்

5.ஆட்டோ குலுங்கல்
தொலைபேசிக்காரர் கொத்திப் போட்ட நெடுஞ்சாலையில்
முடிவு
சுகப்பிரசவம்

6.வீட்டில் அனைவரும் நலம்
தினமும் சாரைசாரையாய் கண்ணீர்
தொலைக்காட்சித் தொடர்

7.தமிழ் ஆசிரியர்க்கு மகிழ்ச்சி
மகள் அழைக்கிறாள்
daddy

8.french காசுக் கொடுத்துப் படிக்கிறான்
அ ஆ எழுத தெரியாது
இன்றைய தமிழன்

9.அழகிய முகத்திற்கு ஏங்கினேன்
கல்லூரிக்கட்டணம்
பீயுட்டி பார்லரில்

10.பேருந்து வந்தது
ஏறவில்லை
காத்திருக்கிறேன் நண்பனுக்காக
ஓசிப்பயணம்





11.ஐயோ!! என் நண்பன் போகிறான்!!
படித்து முடித்துபம்பாய்க்கு போகிறான் நண்பன்
சுற்றமும் நட்பும் சூழ
சந்தோச உச்சியில் அவன்
சுற்றத்தினரை மறந்து கண்ணீரும் கம்பலையுமாய் நான்
என் மனதில்
நாங்கள் ஒற்றுமையாய் அடித்த ஒற்றை சிகரெட்
ஓட்டிஓட்டி தேய்த்த ஓட்டை சைக்கிள்
அக்கவுன்ட் வைத்து குடித்த நாயர்கடை டீ
ஆள் இல்லாதபோது உடைத்த கோயில் உண்டியல்
அகிலாவுக்கு இருவரும் கொடுத்த காதல் கடிதம்
அவள் அண்ணனிடம் வாங்கிய செருப்படி
அத்தோடு
பேச வாய் எழவில்லை
அவன் என்னைப் பார்க்க நான் அவனைப் பார்க்க
சுற்றம் எம்மை பார்க்க
அனைவரும் வாயடைத்து போயினர்
எங்கள் ந்ட்புக்காக!!
என்னை அணைத்துக் கொண்டான்
நான் வாயில் பேசவில்லை
மனதில் பேசினேன்
நாயர் கடை பாக்கியை மறந்துட்டு போறியே பேமாலி!!
நாளைக்கு கடைப்பக்கம் போனா நான் காலி!!
ஐயோ என் நண்பன் போகிறான்!!



12.இருள் சூழ்ந்த இரவு
பனி படர்ந்த தென்றல்
உடல் வருடும் மெத்தை
இவை தராததை
நீ தருகிறாய்
உன் வகுப்பறையில்






13.காதலிக்கு ஓரு தாஜ் மகால்

கண்ணே கமலா
கண்ணை திறந்தாலும் நீ
கண்மூடிக் கிடந்தாலும் நீ
கண்முன்னே வருகிறாய்
கனவிலும் நனவிலும்
கால்முளைத்த தாஜ் மகால் நீ
உனக்குபரிசாய் தாஜ்மகாலையே தந்தவன் நான்
அன்றோ ஷாஜகான் காதலிக்காக தாஜ்மகாலை கட்டினான்
இன்றோ
நான் உனக்காக எங்கப்பா பர்சை தட்டினேன்
பத்தாம் வகுப்பு பிரவினுக்கோ ஓரு கரிஷ்மா
பல் போன பாண்டியனுகோ ஓரு கருத்தம்மா
பர்சனாலிட்டியான பாவி எனக்கோ
பார்க்க ஆள் இல்லை
மீசை முளைக்காத பொடியனுக்கெல்லாம் ஆசை காதலி
கண்ணே மன்றாடி கேட்கிறேன்
மறுக்காமல் காதலி
பக்கத்து வீட்டு பார்வதி
பார்த்து பார்த்து சிரிக்கிறாள்
பக்குவமாக பேசினால்
பார்க் பீச்சுக்கு வருவாள்
கண்ணே முன்கோப அண்ணனிடம் சொல்லி
முட்டிக்கு முட்டி தட்டாமல்
முடிந்தால் காதலி
முடியாவிட்டால் திருப்பிதந்துவிடு தாஜ்மகாலை
நானும் திருப்பி பரிசளிப்பேன் பார்வதிக்கு!!

14.காதலிக்கு திருமணம்
தாடி வளர்க்கிறேன் நான்
காரணம்
அவள் மனதில் ஓன்றுமில்லை
என் மணி பர்சிலும் தான்





15.இன்று என் காதலியின் திருமணம்
எங்கும் கெட்டிமேள சத்தம்
அய்யர் ஓதும் மந்திரம்
வெட்கச் சிரிப்புடன் அவள்
கம்பிரமாய் அவளின் மணமகன்
அனைவருக்கும் உற்சாகம்
எனக்கோ
மனம் அலைபாய்ந்தது
கால்கள் தடுமாறின
தாலி கட்டியவுடன் ஓட
முதல் பந்திக்கு முந்த





16.கண்ணே கண் மணியே
என்னவளே என் இனியவளே
என் அதிகாலை அலாரம் நீ
என்னை ஆட்டி வைக்கும்
மின்சாரம் நீ
என் கையிக்குள் அடங்கும்
சொர்கம் நீ
உன் உலகில் மயங்கும்
பித்தன் நான்
பகலோ இரவோ
சுட்டெரிக்கும் வெயிலோ
நீ அழைத்தால் ஓடி வர
நான் ரெடி
குயில் இசையோ தேனிசையோ
மனம் வருடும் மெல்லிசையோ
எல்லாம் எனக்கு உன் குரல்
தானடி
என் உயிர் நாடி இருக்கும் வரை
பெண்ணே
என்னோடு நீ இருபாய்
கண்ணே
உன்னை வருடாத நாள் இல்லை
உன்னை காதோடு உரசாத
நொடி இல்லை
அட
நீ இல்லாமல் நானே இல்லை
என்னோடு கலந்து
என் செல்லுக்குள் புகுந்து விட்ட

என் செல்போனே
என் காதலியே!!





2 Comments:

Blogger சிவாஜி said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.

5:15 AM  
Blogger மதுசூதனன் said...

ungal kavithaigal arumai....but english words illama ezhuthina innum standarda irukum.....

8:32 AM  

Post a Comment

<< Home