திக் திக் நிமிடங்கள்
மதிய வேளை 2 மணி..ஒரு குறுகிய மலை சாலையின் ஹைர்பின் வளைவு. ஹைர்பின் வளைவுக்கு அருகே உயர்ந்து நின்று மிரட்டும் ஓரு ஆலமரம்.சாலையைவிட்டு சற்று இறங்கினாலும் தலையைச் சுற்ற வைக்கும் கிடுகிடு பள்ளத்தாக்கு..எங்குப் பார்த்தாலும் முட்புதர்கள்.அந்த முட்புதர்களுக்கு இடையே அப்பளமாய் TATA SUMO .அருகில் உடல் சிதைந்து இரத்த வெள்ளத்தில் நான்கைந்து இளைஞர்கள்.சுமோவுக்கு உள்ளேயும் வெளியேயுமாய்க் கிடந்தார்கள்..இரத்தத்தை உறைய வைக்கும் கோர விபத்து.இதை அப்படியே படம்பிடித்தேன் என் கேமராவில்..நான் விவேக்..NEWS REPORTER!!
கடந்த இரண்டு மாதத்தில் இதே இடத்தில் பத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள்..காரணம்?? யோசிக்கையிலேயே வெயில் மண்டையை தாக்கியது.ஆலமர நிழலில் ஓதுங்கினேன்.அண்ணாந்து பார்த்தேன் ஆலம் விழுதுகளை.
பல நினைவுகள் வந்து போயின
சுள்ளென்று ஒரு அடி முதுகில் விழுந்தது.வலி தாங்காமல் திரும்பினேன்.என்னை அடித்துவிட்டு அழகாய் சிரித்தாள் திவ்யா!என் சக NEWS REPORTER.என்ன விவேக்!! இப்படி முழிக்கிற?? என்றாள்!
இல்ல திவ்யா!இதே இடத்துல இந்த
ஆலமரத்துல ஒரு இளம்பெண் இரண்டு மாசத்துக்கு முன்னாடி தூக்குல தொங்கினாள்!நான்தான் அதையும் போட்டோ எடுத்தேன்.அதற்கு அப்புறம் இங்கு பல விபத்துக்கள்..அதான் யோசித்து கொண்டு இருந்தேன் என்றேன்.
இதுல யோசிக்க என்ன இருக்கு?
விபத்துக்கான காரணங்கள் பல
குறுகிய சாலை,இரவு நேர மங்கலான வெளிச்சம்,மது அருந்திவிட்டு ஓட்டுதல் இப்படி பல..
ரொம்ப யோசிக்காத சீக்கிரமா போட்டோ எடுத்துவிட்டு வந்து சேரு!இன்னும் 2 PRESS மீட் போகனும் என்று கூறிவிட்டு தன் KINETIC HONDAவில் பறந்துவிட்டாள்
திரும்பி பார்த்தேன் பள்ளத்தாக்கை! அங்கிருந்த ஓவ்வொரு சடலத்தையும் AMBULANCEல் ஏற்றினார்கள்.அட!எத்தனை உயிர்ப்பலி இங்கே! ஏனோ தெரியவில்லை தூக்கில் தொங்கிய அந்த பெண்ணின் முகம் மனதில் நிழலாடியது
தூரத்தில் ஓரு டீ கடை கண்ணில் பட்டது அங்கு சென்று அமர்ந்தேன்!டீ கேட்டுவிட்டு கடைக்காரனிடம் பேச்சு கொடுத்தேன்!
"அந்தப்பொண்ணு தூக்குல தொங்கினதுல இருந்து இந்த இடமே இரத்தம் குடிக்க ஆரம்பிச்சிடுச்சுங்க!இராத்திரில நடமாட முடியல! வயசுபசங்க எல்லாம் செத்து போறாங்க!
ஊர்க்காரங்க இரண்டு மூனு பேரு இராத்திரில ஆலமரம் பக்கம் ஓரு பொண்ணு நிக்குறானு வேற சொல்லுறாங்க!பயத்துல இப்ப எல்லாம் டீ கடையை சாயங்காலம் 6 மணிக்கே சாத்திடுறேன்!" என்றான்.
சின்ன வயதில் பாட்டி சொன்ன பேய்க் கதைகள் வந்து பயமுறுத்தின.எனது YAMAHA BIKEயை START செய்து உடனே இடத்தை விட்டு அகன்றேன்!
இரவு 10மணி! எனக்குள் குறுகுறுப்பு பழைய செய்திதாள்களைச் சேகரித்தேன்.அந்த இடத்தில் விபத்தில் இறந்தவர்கள் எல்லோரும் இளைஞர்கள்???நெஞ்சில் ஓரு பயம் பரவியது.
மனதை திசை திருப்ப டிவி பார்த்தேன்.11 மணி அளவில் செல்போன் அலறியது!
"சார் நீங்க கொடுத்த NEGATIVES ஏதுவுமே சரியில்ல! PHOTOS ஏதுவுமே விழவில்லை நாளைக்கு NEWS PUBLISH பண்ணனும்!ATLEAST அந்த ACCIDENT PLACE போட்டோஸ் வேணும் இப்ப!எப்படியாவது வேற தாங்க சார்"என்றான் பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து ராம்...சரி என்றேன்..
BIKEயை கிளப்பி அந்த ஹைர்பின் வளைவை நோக்கிப் போனேன்.டீ கடைக்கு அருகிலேயே பைக்கை நிறுத்திவிட்டு அந்த ஆலமரம் நோக்கி ந்டந்தேன்!!கால்கள் நடுங்கியது!எங்கும் இருட்டு! கண்ணை மறைக்கும் பனி! மயான அமைதி!என் கையில் TORCH மற்றும் CAMERA!TORCH அடித்து LOCATION பார்த்தேன்.CAMERA FLASH அழுத்தினேன்.PHOTOS READY!
BIKEயை நோக்கித் திரும்புகையில் முட்புதர்களுக்குள் ஏதோ சத்தம்!சிறு முனகல்! அதைத் தொடர்ந்து ஓரு பெண் குரல் !தெளிவாக என் பெயரை உச்சரித்தது! விவேக்! விவேக் ! என்று...தூக்கில் தொங்கிய அந்த பெண்ணா??
பயத்தில் இரத்தம் உறைந்துவிட்டது!ஒடிச்சென்று பைக்கை கிளப்பினேன்.NEGATIVE ROLLயை பத்திரிக்கை அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வீடுவந்து சேர்ந்தும் பயம் நீங்கவில்லை!இரவு முழுவதும் பயங்கர கனவுகள் தூக்கத்தை கலைத்தன!
காலை 6 மணிக்கு மீண்டும் செல்போன் அலறியது!
மீண்டும் மறுமுனையில் ராம்,"சார் அந்த ஹைர்பின் வளைவுல இன்னொரு ACCIDENT ஆம் சார்!நியூஸ் COLLECT பண்ணிடுறிங்களா சார்??என்றான். சரி!நீயும் என்னுடன் வா என்று அவனையும் அழைத்துக்கொண்டு ஹைர்பின் வளைவு நோக்கி பைக்கில் சென்றேன்.
AMBULANCE,POLICE ஜீப் என்று சாலை நிரம்பி வழிந்தது ஓரமாய் பைக்கை நிறுத்திவிட்டு பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றேன்.
கேமராவில் கோணம் பார்த்தேன்.அதிகாலை நேரம் !செவ்வானம் பளபளத்தது!அதற்கு போட்டியாக முட்புதர்களில் தெளித்த இரத்தம் கண்ணை பறித்தது!முட்புதர்களுக்குள்……………… நசுங்கிய KINETIC HONDAஅதனருகே உயிரற்று உருக்குலைந்த நிலையில் திவ்யா!!!!!!!!!!!!!
எப்படி இது????????????????????
"ஐயோ சார் நேத்து உங்களுக்கு முன்னாடி திவ்யா மேடத்துக்கு போன் பண்ணிப் போட்டோஸ் கேட்டேன்.அவங்க போட்டோஸ் எடுக்க வந்தப்ப ACCIDENT ஆயிடுச்சு போல சார்" என்று அலறினான்..
..அப்ப நேற்றிரவு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த திவ்யா தான் என் பெயரைச் சொல்லி அழைத்தாளா??ஐயோ! நெஞ்சு வெடித்தது எனக்கு!!
8 Comments:
WOw vijiya... superb man!! am seriously telling u.. u have made a geat jump from ur first story to ur next one! an excellent piece! i just luv the ending so much!! really wonderful!! fabulous!!
but one thing that i would like to say is that u can add more 'thrilling' words to create a scary atmosphere. this will better enhance the quality of the storyline. but still.. this itself has scored 100%!!! wonderful dear!! keep the good work going!!
the story was good and interesting. but, around the end it was predictable.
The previous story was much more engaging and unpredictable.
Good try...keep it up...
Wow...Great story with unpredictable ending.
I enjoyed very much, the suspense maintained by the story. Infact I liked your approach of writing in realistic manner, instead of adding unrealistic masalas. Your first attempt is really appreciable. Keep going.
ஹைர்பின் வளைவுக்கு அருகே உயர்ந்து நின்று மிரட்டும் ஓரு ஆலமரம்.
இந்த வாக்கியம் கொஞம் உறுத்தலாய் இருக்கிறது. வளைவுகளில் ஆலமரம் என்பது நான் இதுவரை பார்க்காத கேள்விப்படாத ஒன்று.
அன்பர்கள் சொன்னது போல் நேரடி ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கலாம்.
மற்றபடி...
அருமையான கதை..அற்புதமான திருப்புமுனையுடன் கூடிய முடிவு..
வாழ்த்துக்கள் விஜயா
really very interesting...
கண்முன் காண்பது போல சூழலை விவரித்த விதம் மிகவும் அருமை. விபத்து நடந்ததன் காரணத்தை இன்னும் சற்று விவரித்திற்கலாம்....!புதிராக இருந்தது.......... அடிக்கடி விபத்து நடந்தபோதும் அதற்கு முன்னெச்சரிக்கைப் பலகை இல்லாதது ஒரு நெருடல்...... ஆனால் கதைக்கு ஓர் உயிரோட்டத்தைத் தந்தது......... இந்த அறிவியல் யுகத்திலுங்கூட பேய் இருப்பதை மக்கள் நம்பத்தான் செய்கிறார்களா.....? அந்தக் குறிப்பிட்ட இடத்தில் நடந்த பல விபத்துக்களைப் புகைப்படம் எடுத்து செய்தி வெளியிட்ட விவேக்கிற்கு பழைய செய்தித்தாள்களைப் பார்த்துத்தான் விபத்தில் பலியானவர்கள் இளைஞர்கள் எனத்தெரிய அவசியமில்லை......ஆனாலும் தூக்கிட்டு இறந்தது பெண் என்பதால் சூழலை உணர்த்தவே என்பதைப் புரிந்து கொண்டேன். எப்படி ஒரே நேரத்தில் விவேக் மற்றும் திவ்யா எடுத்த புகைப்படங்கள் இல்லாமல் போகும்...........! இரவு பதினொரு மணிக்கு விபத்துப் பகுதியில் அப்படி என்ன புகைப் படம் எடுக்க முடியும் எனத்தெரியவில்லை. பாவம் விவேக்கின் பயத்தால் திவ்யா அநியாயமாக இறந்து விட்டார்.
தர்க்கத்தைத் தவிர்த்துப் பார்த்தால் க(வி)தை திக் திக் நிமிடங்களாகத்தான்......
வாழ்த்துக்கள்
hey da my dear chellam enna neee oru nalaikki oru avatharam edukkura man..im not thrilld much w ur thriller man,failed to cause any tremor or to throb my pulses up,why? u forgot?ur tongue slipped a bit nd spelled d whole story whn we met last wk..anyhw watevr u do or say or write it kips me stirring dear..kip going da mount everest is not faraway fr u man..wat u need s a gud pair of shoes!!! hahaa let me bring it fr u da gal..chumma kindals okva!!!
Greate Story...I like it.
Post a Comment
<< Home