Monday, August 14, 2006

நீயும் நானும்
its a bday poem for my dear mother.



கடல் சிப்பியா நீ
சிப்பிக்குள் முத்தா நான்?
உன் முத்தக்கடலில் என்னை ஏன்
முழ்கடித்தாய்

பூமியா நீ
அதில் புதையலா நான்?
உன்னைத் தோண்டி என்னை ஏன்
பெற்றெடுத்தாய்

இயேசுவா நீ
யூதாஸா நான்?
உன்னை மார்பில் உதைத்தால் ஏன்
அணைத்துக்கொண்டாய்?



மெழுகுவர்த்தியா நீ
அதில் தீபமா நான்?
உன்னைக் கரைத்து எனக்கு ஏன்
உணவளித்தாய்?

கடவுளா நீ
உன் பக்தனா நான்?
உன் அருள் முகம் காட்டி என்னை ஏன்
ஆட்டிப்படைக்கிறாய்?

உனக்குள் பலபேர்
அம்மா,அக்கா,தோழி என்று
வந்துபோகிறார்கள்
நான் வேண்டும்போதெல்லாம்

உனக்கே தெரியாமல்
உன்னிடம் ஓரு பொக்கிஷம்
ரகசியம் காதைக் கொடு
உன் உள்ளங்கை தான்



என்சிரிப்பு,சந்தோசம்,துக்கம்,தூக்கம்
அனைத்துக்கும் தீர்வு
உன் உள்ளங்கை தான்


உன்னால் நான் பிறந்தேன்
உனக்கோ இன்று தான் பிறந்தநாள்
தேய்பிறையில் தேயிந்தாலும் நிலவு நிலவுதானே
வயதானலும் என்றும் நீ என் உயிர்தானே

உன் இதய லப்டப் ஓசை ஏன் மெதுவாக கேட்கிறது?
என் கணம் தாங்காமலா?
போதும் நீ என்னை சுமந்தது
இனி நான் உன்னைச் சுமக்கிறேன்


இப்போதெல்லாம் அடிக்கடி கோவிலுக்கு போகிறேன்
மறு ஜென்மம் உண்டாமே?
உண்டேன்றால்
மறுபடியும் வேண்டுமே
எனக்கு நீ அம்மாவாக!!

4 Comments:

Blogger செல்வேந்திரன் said...

Nice Once VB !!

3:23 AM  
Blogger kaaviyan said...

கல்நெஞ்சன் தான் நான். என் மனதையும் கிள்ளிய உன் வரிகளுக்கு வாழ்த்துக்கள்.உணர்வைத் தூண்டும் உங்கள் எழுத்துக்கள் என்றும் தொடரட்டும்.

4:41 PM  
Blogger N Suresh said...

அன்பிற்கினிய விஜயா,

நல்ல கவிதையென்று இதை பறைசாற்ற தமிழிலிருக்கும் அத்தனை வாழ்த்துரைகள் எடுத்து வந்தாலும் அவைக்கு முன் முந்தின என் கண்ணீரின் மௌனமான பாராட்டு உங்கள் பேனாவையும் எழுதின விரல்களையும் முத்தமிட்டு பாரட்டுகிறது.

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

பாசமுடன்
என் சுரேஷ், சென்னை

9:43 PM  
Blogger Vijay said...

thanks for ur comments..

10:57 PM  

Post a Comment

<< Home