Friday, January 19, 2007

Hi All, this my recent thriller..enjoy..dnt forget to post ur comments



இருளுக்குள் யார்???



பெங்களூர்( Bangalore) , ஜனவரி 30, 12.am..
எங்கும் இருள் ஆள் நடமாட்டம் இல்லாத சாலை ,அதில் எறும்பாய் ஊர்ந்து சென்றது எனது மாருதி கார்.குளிருக்கு பயந்து கார் ஜன்னல் கதவை திறக்கவில்லை நான் .

நான் சுரேந்தர்..சொந்த ஊர் சென்னை..இப்போது வேலைக் காரணமாக பெங்களூர் வாசம்..இரண்டு நாள் விடுப்பு எடுத்து சென்னை சென்றுவிட்டு இன்று தான் வீடு திரும்புகிறேன்

அதோ வந்துவிட்டது வீடு..பெரிய காம்பவுண்டு சுவருக்கு முன் இரண்டு ஆள் உயர கேட்.

கேட் அருகே காரை நிறுத்தினேன்..மெல்ல கேட்டை திறந்தேன்(உள்ளே தாளிடவில்லை! எப்போதும் அப்படித்தான்! திருட்டு பயம் இல்லை!! ஏன் ? திருடர்களுக்கே இங்கே வர பயம் தான் )
6 மாதம் முன்பு ,ஒரு பெரிய பங்களா 3000 ரூபாய் வாடகைக்கு வருது..ஒகே வா?? என்று கேட்டான் என் நண்பன் பீட்டர். சந்தோசத்தில் தலையாட்டினேன்..எப்படி இது? வந்து பார்த்த போது அறிந்து கொண்டேன்.
பேய் பங்களா ,haunted house என்று பல பெயர்கள் இந்த வீட்டுக்கு!!
இதற்கு முன்பு இங்கு இருந்தவர்கள் எல்லாம் அற்ப வயதில் இறந்துவிட்டார்களாம்..பல கதைகள் இந்த வீட்டை பற்றி உலா வந்தன..
பீட்டர் என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தான்..என்னடா பயமா இருக்கானு ?? இல்லடா ! எனக்கு ஒகே என்றேன்.
நான் ,பீட்டர், வைத்தியநாதன் மூவரும் குடி வந்தோம் .. வந்த ஓரு மாதத்திலேயே வைத்தி எதையோ பார்த்து பயந்து ஓடிவிட்டான்..அவன் அப்படிதான் ஆபீஸில் அனைவரும் அவனை கிண்டல் செய்வோம்.
அவன் சென்ற பிறகு 5 மாதமாய் நானும் பீட்டரும் மட்டும் தான் இங்கே
இரண்டு நாள் சென்னை சென்றுவிட்டு இன்று தான் வருகிறேன்
கேட்டை திறந்தால் நிலவொளியில் பளிச்சிட்டது பங்களா! எந்த ஓரு விளக்கும் வீட்டிற்குள் எரியவில்லை!
மணி 12.30, இப்போது பீட்டர் தூங்கிக் கொண்டிருப்பான்..காரை நிறுத்திவிட்டு மாற்று சாவிக் கொண்டு விட்டைத் திறந்தேன்..எங்கும் இருட்டு ..கண்களுக்கு இருள் பழகிய பின்..சுற்றும் மூற்றும் பார்த்தேன்..அறையோரத்தில் யரோ நிற்பது போல் இருந்தது..பீட்டர் ??? என்றேன் பதில் இல்லை


சட்டென்று திரும்பி லைட்டை போட்டேன்..வெறிச்சொடி கிடந்தது அறை …….யாரும் அருகில் இல்லை..யாரது?? பீட்டரா?? இல்லை யாரோ இருப்பது போல் மன பிரமையா? தெரியவில்லை..

இது முதல் முறை அல்ல
இப்படிதான் பலமுறை யாரோ நிற்பது போல் தெரியும் லைட் ஆன் செய்தால் யாரும் இருப்பது இல்லை..கதவை சாத்திவிட்டு என் அறைக்குச் சென்றேன் கொண்டு வந்த பொருட்களை மேஜையில் வைத்துவிட்டு பீட்டர் அறை நோக்கி சென்றேன்.
கதவு சாத்தி இருந்தது..பீட்டர் !! பீட்டர்!! என்றேன்..பதில் இல்லை, பின்பு லேசாக முனகல்..ஓ !! தூங்குகிறான் போல! தூக்கத்தில் எழுப்பினால் கண்டபடி திட்டுவான் ஓழுங்கு மரியாதையாக என் அறைக்கு வந்துவிட்டேன்.
மேஜை நாற்காலியில் அமர்ந்து ….. ,கொண்டு வந்த பைல்களை அடுக்கினேன்.யாரோ பின்புறமாய் என்னை பார்ப்பது போல ஒரு உணர்வு! எனக்கு பின்னால் ஜன்னல் இருக்கும்..ஜன்னலுக்கு வெளியே ?? யார்??
மெதுவாய் திரும்பினேன் குளிர்காற்றில் நடனமாடியது ஜன்னல் கதவு

வெளியே கும்மிருட்டு..உற்றுப் பார்த்தேன் யாரும் இல்லை..ஜன்னல் கதவுகளை சாத்திவிட்டு படுக்கையில் சாய்ந்தேன்.

மணி 1.30 am..என்னவோ தெரியவில்லை..இன்று மனமே சரியில்லை! ஏதோ தப்பு நடக்க போவது போல் ஓரு உணர்வு..
இந்த வீட்டில் நடக்கும் பல சம்பவங்கள் விசித்திரமாக உள்ளது!
பீட்டரும் நானும் விளையாடிவிட்டு சிதறி போட்ட சீட்டு கட்டுக்கள் மாலை நாங்கள் இருவரும் வரும்போது அடுக்கப்பட்டிருக்கும்
என்ன பீட்டர்? நீ அடுக்கினாயா? என்று கேட்டால் பீட்டர் நக்கலாய் சிரித்து ஆமாம்டா ஆபிஸ்ல பாதி வேலையில அடடா கார்ட்ஸ் அடுக்க மறந்துட்டேனேனு பீல் பண்ணி வீட்டிக்கு வந்து அடுக்கிட்டு போனேன் என்பான்.
இப்படித்தான் இந்த வீட்டில் நான் வைத்த பொருட்கள் வைத்த இடத்தில் இருப்பது இல்லை..எனக்கு மட்டும் தான ??
இல்லை!!! பீட்டருக்கும் தான்..காலையில் அவன் ஷுவை கண்டுபிடிக்கவே அவனுக்கு பாதி நேரம் போகும்
ஏதோ இந்த வீட்டில் வித்தியாசமாக உள்ளது என்று இருவரும் உணர்ந்தோம் ஆனால் ஏனோ அதை இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லை

ஒரு நாள் ஓய் ஜா (OUIJA) போர்டு வரைந்து பீட்டர் ஆவியை அழைக்கிறேன் என்று கூத்தடித்தான்.ஒரு தம்ளரை இங்கும் அங்குமாய் நகற்றினான்.டேய்! ஆவி நகர்த்துடா என்று நக்கலடித்தான்.உண்மையில் இதில் எல்லாம் அவனுக்கு நம்பிக்கை உண்டா ? தெரியவில்லை எனக்கு..

பக்கத்து அறையில் ஒரே சலசலப்பு ..என் நினைவோட்டத்தை கலைத்தது. பாத்ரூமில் தண்ணிர் திருகிவிடும் சத்தம்.பீட்டர் எழுந்துவிட்டானா ?மணி 1.45 am
தண்ணிர் சத்தம் நின்றபாடில்லை..என்ன செய்கிறான் தண்ணீரில் இவ்வள்வு நேரம் ??
குளிக்கிறான நடுராத்திரியில்? செய்தாலும் செய்வான்..
பீட்டர் நீ ஒரு குழப்பவாதி
சிரித்துக் கொண்டு மெல்ல உறங்க ஆரம்பித்தேன் ,தண்ணீர் சத்தமும் நின்றது!
காலை 7 மணி! குளித்துவிட்டு நான் ரெடி.டீ கொடுக்கும் பையனும் வந்துவிட்டான்! இன்னும் பீட்டர் எழுந்தபாடில்லை..என்ன செய்கிறான் இன்னும்? டீ பையன் கதவை தட்டிவிட்டு அறை உள்ளே சென்றான்..பின்பு வீல் என்று ஒரு சத்தம்..
போலிஸ் ஜீப் , அம்புலன்ஸ் எல்லாம் வந்தது,குளியல் அறைக்குள் விறைத்துப் போய் சடலமாய் கிடந்த பீட்டரை எடுத்து சென்றார்கள்..கூடவே என்னையும் இழுத்துச் சென்றார்கள்..எல்லோரும் என்னை கொலைக்காரன் என்பது போல் பார்த்தனர்..பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்த என் பெற்றோரை தவிர..
போலிஸ் ஸ்டேஷனில் என்னை கேள்வியால் சாகடித்தார்கள்..
பீட்டர் போஸ்மார்ட்டம் ரீப்போர்ட் வந்தது..
குளியல் அறைமின்சாரக் கசிவு தான் அவன் சாவிற்கு காரணம் மேலும் அவன் இறந்து இரண்டு நாட்கள் ஆகிறது என்றனர்.
இரண்டு நாட்கள் நான் சென்னையில் இருந்ததற்கு ஆதாரம் இருந்ததால் என்னை விட்டுவிட்டனர்
ஒரே மர்மாய் இருந்தது பீட்டர் இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்துவிட்ட்டான் என்றால் நேத்து நான் வந்த போது பக்கத்து அறையில் இருந்து வந்த சத்தத்திற்கு என்ன அர்த்தம் ?? போலிஸிடம் சொல்லி மேலும் குழப்ப வேண்டாம் என்று வந்துவிட்டேன்
போலிஸ் கேஸ் முடிந்து வீட்டிற்கு வந்தேன் . டேய் ! அந்த வீடு வேண்டாம் மறுபடியும் அங்கேயே தங்காதே என்றனர் நண்பர்கள் .அவர்களுக்கு என்ன தெரியும் ? வீட்டுக்காரன் அட்வான்ஸ் திருப்பித் தர மறுக்கிறான் ,,ஓரு மாதம் அவகாசம் வேண்டுமாம் . என்னிடமும் போலிஸ் கேஸ் என்று செலவழித்ததால் பாக்கெட் காலி !வேறு வழியில்லை !! ஒரு மாதம் இந்த வீடுதான்..
வீட்டிலிருந்த சீட்டுக்கட்டுக்கள், சோபா செட் ,இயேசு கிறிஸ்து படம் எல்லாம் பீட்டரையே ஞாபகப்படுத்தியது .முகத்தில் ஒரு அலட்சிய சிரிப்புடன் வளைய வருவான்..எப்படி இருந்தவன் ? அவன் சடலமாய் விறைத்துப்போய் கண்கள் பிதுங்கி!!ஐயோ வேண்டாம் ரீ கால் (RE CALL) செய்யாதே! என்றது மனது!
இரவு 8 மணி அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு வந்தேன்..என்னமோ தெரியவில்லை அம்மா கொடுத்த மந்திர கயிற்றை கயில் கட்டிக் கொண்டேன்.
டிவியை போட்டேன்..சேனல்கள் எல்லாம் மாற்றப்பட்டிருந்தது .. நான் போட்டவுடன் வரும் ஸ்போர்ட்ஸ் சேனலை காணவில்லை..இது என்னுடைய டிவி..பீட்டர் டிவி பார்க்க மாட்டான்..யார் என்னைத்தவிர மாற்றிருப்பார்கள் ??
ஒரு வேளை பீட்டர் தானோ? குழம்பாதே விட்டுவிடு என்றது மனது..
திரும்பவும் ஏதோ நடக்கப்போவது போல் ஒரு உணர்வு. 10 மணிக்கு எல்லாம் என் அறைக்கு சென்று படுத்துவிட்டேன்
தூக்கம் வரவில்லை..என்ன நடக்கிறது இங்கே? பேயா? ஆவியா? மர்ம மனிதனா? தெரியவில்லை எனக்கு..
அந்த கண்ணுக்கு தெரியாத உருவத்தைக் கண்டு பயப்படத் தொடங்கினேன்..



மனதை மாற்ற அத்தைப் பெண் கல்யாணியை நினைக்கப் பார்த்தேன் ..நோ யூஸ்!! (NO USE) பாத் டப்பில் கண் பிதுங்கி இறந்து போன பீட்டர் தான் கண்முன் வந்தான்!!
மணி 12 .30 am
திடிரென்று பக்கத்து அறையிலிருந்து சலசலப்பு..தொடர்ந்து தண்ணீர் சத்தம்..யாரது???????????
நிமிடங்கள் கரைந்தன..
தண்ணீர் சலசலப்பு அதிகரித்தது..மேலும் பக்கத்து அறையில் யாரோ அங்கும் இங்கும் அசையும் சத்தம்.என் அறை கதவு தாழிட்டு இருந்தது..
பக்கத்து அறைக்குப் போய் என்னவென்று பார்ப்பதா? இல்லை இங்கேயே விடியும் வரை பயத்துடன் தவிப்பதா? இங்கே இரு என்றது என் உள் மனம்..என்னவென்று பார் என்று விரட்டியது தைரியம்..
என் அறைக்கதவு தாழ்பாழை திறந்து பீட்டர் அறை அருகே சென்றேன்....பாதி திறந்த நிலையில் இருந்தது அறைக்கதவு …கதவை தள்ளி உள்ளே சென்றேன்..காலில் ஈரம்..குளியல் அறையிலிருந்து தண்ணீர் வழிந்து அறை முழுவதும் தேங்கிருந்தது..
மெல்ல நடந்தேன்..
தண்ணீர் சத்தம் குளியல் அறையிலிருந்து வந்து கொண்டேயிருந்தது..
குளியல் அறை நோக்கி சென்றேன்...என் இதய துடிப்பு எகிற தொடங்கியது..
மெல்ல குளியல் அறைக்கதவை திறந்தேன்..உள்ளே பைப், ஷவர், பாத் டப்பிலிருந்து தண்ணீர் சீறீப்பாய்ந்தது..உற்று நோக்கினேன் பாத் டப்பிற்குள் இருளில் ஒரு உருவம்....யாரது??? பீட்டரா??????????????? ஆ ஆ ஆ ஆ ஆ?????????
மறுநாள் காலை..ஜி.எச்..மார்சுவரி..(GH MORTUARY) அழுது வடிந்த முகத்துடன் சுரேந்தர் பெற்றோர் மற்றும் நண்பர்கள்..
சுரேந்தர் போஸ்மார்ட்டம் ரீப்போர்ட்ல சடன் கார்டியாக் ஆரஸ்ட் (SUDDEN CARDIAC ARREST) னு வந்திருக்கு..கொலையோ தற்கொலையோ இல்லை என்றனர் காவல்துறை..
நாங்க எல்லாம் அப்பவே சொன்னோம் அந்த பேய் பங்களாவுல தங்காதிங்கடானு அவனுங்க இரண்டு பேரும் கேட்கல.. என்று கதறினர் நண்பர்கள்..
ஆமாம் நானும் அப்பவே சொன்னேன் என்று அவர்கள் கூடவே சேர்ந்து தலையாட்டினான் வைத்தி!! சுரேந்தரையும் பீட்டரையும் அணுஅணுவாய் நடுங்க வைத்து யாரும் அறியாமல் அழகாய் கொன்றுவிட்ட சூப்பர் டுப்பர் சைக்கோ கில்லர் வைத்தி என்ற வைத்தியநாதன்..


Friday, October 20, 2006


காத்திருக்கிறேன்
this is my favourite poem. it is very special becoz it was published in aval vikadan long back.
உனக்காக கண் இமைக்காமல் காத்திருக்கிறேன்
உன்னால் கண் விழித்த இரவுகள் எத்தனை??
கனவிலும் நீ
கனவு கலைந்த பின்னும் நீ
வந்து வந்து போகிறாய்
வாட்டி வதைக்கிறாய்
காதலித்து ஏங்குபவர்கள் மத்தியில்
நீயோ வெறுக்க வைத்து ஏங்க வைக்கிறாய்
உனக்காகவே கரையும் என்னை
கரையேற்ற வந்துவிடு
எப்போதுமே என்னை திணற வைக்கும் என்
தேர்வு முடிவுகளே!

Saturday, October 14, 2006


திக் திக் நிமிடங்கள்
மதிய வேளை 2 மணி..ஒரு குறுகிய மலை சாலையின் ஹைர்பின் வளைவு. ஹைர்பின் வளைவுக்கு அருகே உயர்ந்து நின்று மிரட்டும் ஓரு ஆலமரம்.சாலையைவிட்டு சற்று இறங்கினாலும் தலையைச் சுற்ற வைக்கும் கிடுகிடு பள்ளத்தாக்கு..எங்குப் பார்த்தாலும் முட்புதர்கள்.அந்த முட்புதர்களுக்கு இடையே அப்பளமாய் TATA SUMO .அருகில் உடல் சிதைந்து இரத்த வெள்ளத்தில் நான்கைந்து இளைஞர்கள்.சுமோவுக்கு உள்ளேயும் வெளியேயுமாய்க் கிடந்தார்கள்..இரத்தத்தை உறைய வைக்கும் கோர விபத்து.இதை அப்படியே படம்பிடித்தேன் என் கேமராவில்..நான் விவேக்..NEWS REPORTER!!
கடந்த இரண்டு மாதத்தில் இதே இடத்தில் பத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள்..காரணம்?? யோசிக்கையிலேயே வெயில் மண்டையை தாக்கியது.ஆலமர நிழலில் ஓதுங்கினேன்.அண்ணாந்து பார்த்தேன் ஆலம் விழுதுகளை.
பல நினைவுகள் வந்து போயின
சுள்ளென்று ஒரு அடி முதுகில் விழுந்தது.வலி தாங்காமல் திரும்பினேன்.என்னை அடித்துவிட்டு அழகாய் சிரித்தாள் திவ்யா!என் சக NEWS REPORTER.என்ன விவேக்!! இப்படி முழிக்கிற?? என்றாள்!
இல்ல திவ்யா!இதே இடத்துல இந்த
ஆலமரத்துல ஒரு இளம்பெண் இரண்டு மாசத்துக்கு முன்னாடி தூக்குல தொங்கினாள்!நான்தான் அதையும் போட்டோ எடுத்தேன்.அதற்கு அப்புறம் இங்கு பல விபத்துக்கள்..அதான் யோசித்து கொண்டு இருந்தேன் என்றேன்.
இதுல யோசிக்க என்ன இருக்கு?
விபத்துக்கான காரணங்கள் பல
குறுகிய சாலை,இரவு நேர மங்கலான வெளிச்சம்,மது அருந்திவிட்டு ஓட்டுதல் இப்படி பல..
ரொம்ப யோசிக்காத சீக்கிரமா போட்டோ எடுத்துவிட்டு வந்து சேரு!இன்னும் 2 PRESS மீட் போகனும் என்று கூறிவிட்டு தன் KINETIC HONDAவில் பறந்துவிட்டாள்
திரும்பி பார்த்தேன் பள்ளத்தாக்கை! அங்கிருந்த ஓவ்வொரு சடலத்தையும் AMBULANCEல் ஏற்றினார்கள்.அட!எத்தனை உயிர்ப்பலி இங்கே! ஏனோ தெரியவில்லை தூக்கில் தொங்கிய அந்த பெண்ணின் முகம் மனதில் நிழலாடியது
தூரத்தில் ஓரு டீ கடை கண்ணில் பட்டது அங்கு சென்று அமர்ந்தேன்!டீ கேட்டுவிட்டு கடைக்காரனிடம் பேச்சு கொடுத்தேன்!
"அந்தப்பொண்ணு தூக்குல தொங்கினதுல இருந்து இந்த இடமே இரத்தம் குடிக்க ஆரம்பிச்சிடுச்சுங்க!இராத்திரில நடமாட முடியல! வயசுபசங்க எல்லாம் செத்து போறாங்க!
ஊர்க்காரங்க இரண்டு மூனு பேரு இராத்திரில ஆலமரம் பக்கம் ஓரு பொண்ணு நிக்குறானு வேற சொல்லுறாங்க!பயத்துல இப்ப எல்லாம் டீ கடையை சாயங்காலம் 6 மணிக்கே சாத்திடுறேன்!" என்றான்.
சின்ன வயதில் பாட்டி சொன்ன பேய்க் கதைகள் வந்து பயமுறுத்தின.எனது YAMAHA BIKEயை START செய்து உடனே இடத்தை விட்டு அகன்றேன்!
இரவு 10மணி! எனக்குள் குறுகுறுப்பு பழைய செய்திதாள்களைச் சேகரித்தேன்.அந்த இடத்தில் விபத்தில் இறந்தவர்கள் எல்லோரும் இளைஞர்கள்???நெஞ்சில் ஓரு பயம் பரவியது.
மனதை திசை திருப்ப டிவி பார்த்தேன்.11 மணி அளவில் செல்போன் அலறியது!
"சார் நீங்க கொடுத்த NEGATIVES ஏதுவுமே சரியில்ல! PHOTOS ஏதுவுமே விழவில்லை நாளைக்கு NEWS PUBLISH பண்ணனும்!ATLEAST அந்த ACCIDENT PLACE போட்டோஸ் வேணும் இப்ப!எப்படியாவது வேற தாங்க சார்"என்றான் பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து ராம்...சரி என்றேன்..


BIKEயை கிளப்பி அந்த ஹைர்பின் வளைவை நோக்கிப் போனேன்.டீ கடைக்கு அருகிலேயே பைக்கை நிறுத்திவிட்டு அந்த ஆலமரம் நோக்கி ந்டந்தேன்!!கால்கள் நடுங்கியது!எங்கும் இருட்டு! கண்ணை மறைக்கும் பனி! மயான அமைதி!என் கையில் TORCH மற்றும் CAMERA!TORCH அடித்து LOCATION பார்த்தேன்.CAMERA FLASH அழுத்தினேன்.PHOTOS READY!

BIKEயை நோக்கித் திரும்புகையில் முட்புதர்களுக்குள் ஏதோ சத்தம்!சிறு முனகல்! அதைத் தொடர்ந்து ஓரு பெண் குரல் !தெளிவாக என் பெயரை உச்சரித்தது! விவேக்! விவேக் ! என்று...தூக்கில் தொங்கிய அந்த பெண்ணா??

பயத்தில் இரத்தம் உறைந்துவிட்டது!ஒடிச்சென்று பைக்கை கிளப்பினேன்.NEGATIVE ROLLயை பத்திரிக்கை அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வீடுவந்து சேர்ந்தும் பயம் நீங்கவில்லை!இரவு முழுவதும் பயங்கர கனவுகள் தூக்கத்தை கலைத்தன!


காலை 6 மணிக்கு மீண்டும் செல்போன் அலறியது!
மீண்டும் மறுமுனையில் ராம்,"சார் அந்த ஹைர்பின் வளைவுல இன்னொரு ACCIDENT ஆம் சார்!நியூஸ் COLLECT பண்ணிடுறிங்களா சார்??என்றான். சரி!நீயும் என்னுடன் வா என்று அவனையும் அழைத்துக்கொண்டு ஹைர்பின் வளைவு நோக்கி பைக்கில் சென்றேன்.
AMBULANCE,POLICE ஜீப் என்று சாலை நிரம்பி வழிந்தது ஓரமாய் பைக்கை நிறுத்திவிட்டு பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றேன்.

கேமராவில் கோணம் பார்த்தேன்.அதிகாலை நேரம் !செவ்வானம் பளபளத்தது!அதற்கு போட்டியாக முட்புதர்களில் தெளித்த இரத்தம் கண்ணை பறித்தது!முட்புதர்களுக்குள்……………… நசுங்கிய KINETIC HONDAஅதனருகே உயிரற்று உருக்குலைந்த நிலையில் திவ்யா!!!!!!!!!!!!!
எப்படி இது????????????????????
"ஐயோ சார் நேத்து உங்களுக்கு முன்னாடி திவ்யா மேடத்துக்கு போன் பண்ணிப் போட்டோஸ் கேட்டேன்.அவங்க போட்டோஸ் எடுக்க வந்தப்ப ACCIDENT ஆயிடுச்சு போல சார்" என்று அலறினான்..
..அப்ப நேற்றிரவு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த திவ்யா தான் என் பெயரைச் சொல்லி அழைத்தாளா??ஐயோ! நெஞ்சு வெடித்தது எனக்கு!!

Wednesday, October 11, 2006

துரத்தும் நிழல்கள்
this is my first attempt towards short story.plz give ur comments.

லண்டன்,25 september,westminster bridge,இரவு 12.30 மணி.தடதடக்கும் இதயத்துடிப்புடன் முச்சிரைக்க ஓடி வந்து நிமிர்ந்தேன்.நான் சந்தோஷ்!aeronatical enginner.தற்போது வசிப்பதோ லண்டனில்.மனம் கொதித்தது நண்பன் பிரவினை நினைத்து!பாவி பிரவின்!பழி வாங்கிட்டியேடா!!துரோகி!indian defence force சம்பந்தப்பட்ட முக்கியத்தகவல் என்னிடம் இருப்பதை எப்படியோ தெரிந்துக்கொண்டான்.இப்போது அவன் கையில் அகப்பட்டால்??இராணுவ ரகசியம் உளவாளிக்குப் போய்விடும்!!நிலவொளியில் பளபளத்தது westminster bridge.என் தவிப்பு தெரியாமல் அழகாய் ஓடியது தேம்ஸ் நதி!அங்கங்கே அங்கங்கே சில வெள்ளையர்கள்!என்னைத்தான் பார்க்கிறார்களோ?மணி 12.35,அவனிடம் தப்பி வந்து 5 நிமிடம் ஆகிறது! ம்ம்ம்!சிறு வயதில் பயின்ற அத்லெடிக் ஓட்டம் உதவி!அவனால் என்னைபிடிக்க இயலவில்லை!சட்டென்று திரும்பினேன் !தூரத்தில் அவன்!.என்னை நோக்கி ஓடி வருகிறான்...

மறுபடியும் ஓடத்தொடங்கினேன்..என்னை சுற்றி வளைத்தது ஓரு போலீஸ் கார்.எங்கும் ஸைரன் சத்தம்..துரோகி பிரவின்!என்னை சிக்க வைத்துவிட்டான்! இவர்களிடம் சிக்கித் தாய் மண்ணுக்குத் துரோகம் செய்வதா?இல்லை உயிரைக் கொடுப்பதா?
சட்டென்று குதித்தேன் தேம்ஸ் நதிக்குள்.இரவு நேரப் பனியில் தண்ணீர் கத்தியாய்க் குத்தியது!சிறு வயது நீச்சல் பயிற்சி கைக்கொடுத்தது.மின்னலாய் நீந்தினேன் தீடிரென்று வானத்தில் வெளிச்சம்,ஹெலிக்காப்டர் சத்தம்,british marine unit என்னை நோக்கிப் பாய்ந்தது.ஐயோ! அகப்பட்டுக்கொண்டேனே!தண்ணீருக்குள் இருவர் குதித்து என்னை அலாக்காய்த் தூக்கினர்!சுருக்கென்று ஏதோ குத்தியது..ஓ மயக்க ஊசியோ?மயங்கும் வேளையில் இடியாய்த் தாக்கியது அவள் ஞாபகம்! ப்ரியா! ப்ரியா! என் ஆரூயிர்க்காதலி ப்ரியா!என்ன ஆனாய் நீ? ! உன்னையும் கடத்திவிட்டார்களோ?

தூக்கத்தில் நடப்பது போல் நடந்தேன்.என்னை ஏதோ விமானத்தில் ஏற்றினார்கள்..எங்கும் வினோத மனிதர்கள்!என் கண்கள் ஏங்கின என் ப்ரியாவுக்காக!
நல்ல தூக்கம்,என்னைத் தட்டி எழுப்பினார்கள்,ஓரு அறைக்குள் இழுத்துச் சென்றனர். அங்கே சாதுவாய் அமர்ந்திருந்தான் என் நண்பன் பிரவின்!! துரோகி! ஓரு வெள்ளை கோட்டு போட்ட ஆசாமி என்னைப்பார்த்து சிரிக்கிறான்! சந்தோஷ்! எங்க இருக்கிங்கன்னு தெரியுதா? என்றான்!விட்டேத்தியாக்ச்சிரித்தேன் அவனைப்பார்த்து ஏன் என்னை கடத்திய உனக்குத் தெரியதா? என்றேன் .வெளியே அமருங்கள் என்றான்! வெளியே சென்றுவிட்டேன்!
அறைக்கு வெளியே,நாற்காலியில் அமர்ந்தேன்
உள்ளே என்ன நடக்கிறது? இந்த சின்ன சின்ன அறைக்குள் ப்ரியாவை மறைத்து வைத்திருக்கிறார்களா? நேற்று அப்துல் கலாம் என்னிடம் சொன்ன ரகசியத்தைக் கேட்டுச் சித்திரவதை செய்வார்களோ? எங்கேயோ குரல் கேட்கிறது அது என் ப்ரியாவுடையது தான்! ப்ரியா ! ப்ரியா! ஏங்கு இருக்கிறாய் நீ?
அறைக்குள் பிரவின்: நல்லாத்தான் இருந்தான் சார் லண்டன் வந்தபோது , பிறகு தனக்குள் பேசறது சிரிக்கிறது என்று ஆரம்பிச்சுட்டான்!ப்ரியானு ஓரு பொண்ணை காதலிச்சான் ஆனால் அவள் கல்யாணம் ஆகி போன பிறகும் அவ இங்கதான் இருக்கானு ஊளற ஆரம்பிச்சுட்டான்..தனக்குள்ள பெரிய ரகசியம் இருக்கு! அதை தெரிஞ்சுக்க நான் அவ்னை துரத்துறேனு நினைக்கிறான்! நேத்து வீட்டை வீட்டு ஓடிப்போய் தேம்ஸ் நதிக்குள்ள குதிச்சுட்டான்..பெரிய சீக்கல் ஆயிடுச்சு அதான் மறுபடியும் இவனை இந்தியா அழைச்சுட்டு வந்துட்டேன் என்றான் .
இது ஓரு மனநோய் SCHIZOPHRENIA னு சொல்லுவோம் .சந்தோஷ்க்கு இந்த மனநோய் இருக்கு என்றார் அந்த வெள்ளை கோட்டு போட்ட டாக்டர்!

Wednesday, September 27, 2006

COMEDY TIME
this is full of funny poems to read and have fun







1.சாலையில்
குனிந்த தலை நிமிரவில்லை
கீழேநூறு ரூபாய் நோட்டு

2.பேருந்து நின்றது
இறங்க மனம் இல்லை
சில்லறை பாக்கி

3.காலில் தான் கீறல்
முழு உடல் பரிசோதனை
நோய் ஓன்றுமில்லை பர்சிலும்தான்

4.உடல் பருமன்
எனக்குள் கவலை
தீர்வு கிடைத்தது
கல்லூரி விடுதியில்

5.ஆட்டோ குலுங்கல்
தொலைபேசிக்காரர் கொத்திப் போட்ட நெடுஞ்சாலையில்
முடிவு
சுகப்பிரசவம்

6.வீட்டில் அனைவரும் நலம்
தினமும் சாரைசாரையாய் கண்ணீர்
தொலைக்காட்சித் தொடர்

7.தமிழ் ஆசிரியர்க்கு மகிழ்ச்சி
மகள் அழைக்கிறாள்
daddy

8.french காசுக் கொடுத்துப் படிக்கிறான்
அ ஆ எழுத தெரியாது
இன்றைய தமிழன்

9.அழகிய முகத்திற்கு ஏங்கினேன்
கல்லூரிக்கட்டணம்
பீயுட்டி பார்லரில்

10.பேருந்து வந்தது
ஏறவில்லை
காத்திருக்கிறேன் நண்பனுக்காக
ஓசிப்பயணம்





11.ஐயோ!! என் நண்பன் போகிறான்!!
படித்து முடித்துபம்பாய்க்கு போகிறான் நண்பன்
சுற்றமும் நட்பும் சூழ
சந்தோச உச்சியில் அவன்
சுற்றத்தினரை மறந்து கண்ணீரும் கம்பலையுமாய் நான்
என் மனதில்
நாங்கள் ஒற்றுமையாய் அடித்த ஒற்றை சிகரெட்
ஓட்டிஓட்டி தேய்த்த ஓட்டை சைக்கிள்
அக்கவுன்ட் வைத்து குடித்த நாயர்கடை டீ
ஆள் இல்லாதபோது உடைத்த கோயில் உண்டியல்
அகிலாவுக்கு இருவரும் கொடுத்த காதல் கடிதம்
அவள் அண்ணனிடம் வாங்கிய செருப்படி
அத்தோடு
பேச வாய் எழவில்லை
அவன் என்னைப் பார்க்க நான் அவனைப் பார்க்க
சுற்றம் எம்மை பார்க்க
அனைவரும் வாயடைத்து போயினர்
எங்கள் ந்ட்புக்காக!!
என்னை அணைத்துக் கொண்டான்
நான் வாயில் பேசவில்லை
மனதில் பேசினேன்
நாயர் கடை பாக்கியை மறந்துட்டு போறியே பேமாலி!!
நாளைக்கு கடைப்பக்கம் போனா நான் காலி!!
ஐயோ என் நண்பன் போகிறான்!!



12.இருள் சூழ்ந்த இரவு
பனி படர்ந்த தென்றல்
உடல் வருடும் மெத்தை
இவை தராததை
நீ தருகிறாய்
உன் வகுப்பறையில்






13.காதலிக்கு ஓரு தாஜ் மகால்

கண்ணே கமலா
கண்ணை திறந்தாலும் நீ
கண்மூடிக் கிடந்தாலும் நீ
கண்முன்னே வருகிறாய்
கனவிலும் நனவிலும்
கால்முளைத்த தாஜ் மகால் நீ
உனக்குபரிசாய் தாஜ்மகாலையே தந்தவன் நான்
அன்றோ ஷாஜகான் காதலிக்காக தாஜ்மகாலை கட்டினான்
இன்றோ
நான் உனக்காக எங்கப்பா பர்சை தட்டினேன்
பத்தாம் வகுப்பு பிரவினுக்கோ ஓரு கரிஷ்மா
பல் போன பாண்டியனுகோ ஓரு கருத்தம்மா
பர்சனாலிட்டியான பாவி எனக்கோ
பார்க்க ஆள் இல்லை
மீசை முளைக்காத பொடியனுக்கெல்லாம் ஆசை காதலி
கண்ணே மன்றாடி கேட்கிறேன்
மறுக்காமல் காதலி
பக்கத்து வீட்டு பார்வதி
பார்த்து பார்த்து சிரிக்கிறாள்
பக்குவமாக பேசினால்
பார்க் பீச்சுக்கு வருவாள்
கண்ணே முன்கோப அண்ணனிடம் சொல்லி
முட்டிக்கு முட்டி தட்டாமல்
முடிந்தால் காதலி
முடியாவிட்டால் திருப்பிதந்துவிடு தாஜ்மகாலை
நானும் திருப்பி பரிசளிப்பேன் பார்வதிக்கு!!

14.காதலிக்கு திருமணம்
தாடி வளர்க்கிறேன் நான்
காரணம்
அவள் மனதில் ஓன்றுமில்லை
என் மணி பர்சிலும் தான்





15.இன்று என் காதலியின் திருமணம்
எங்கும் கெட்டிமேள சத்தம்
அய்யர் ஓதும் மந்திரம்
வெட்கச் சிரிப்புடன் அவள்
கம்பிரமாய் அவளின் மணமகன்
அனைவருக்கும் உற்சாகம்
எனக்கோ
மனம் அலைபாய்ந்தது
கால்கள் தடுமாறின
தாலி கட்டியவுடன் ஓட
முதல் பந்திக்கு முந்த





16.கண்ணே கண் மணியே
என்னவளே என் இனியவளே
என் அதிகாலை அலாரம் நீ
என்னை ஆட்டி வைக்கும்
மின்சாரம் நீ
என் கையிக்குள் அடங்கும்
சொர்கம் நீ
உன் உலகில் மயங்கும்
பித்தன் நான்
பகலோ இரவோ
சுட்டெரிக்கும் வெயிலோ
நீ அழைத்தால் ஓடி வர
நான் ரெடி
குயில் இசையோ தேனிசையோ
மனம் வருடும் மெல்லிசையோ
எல்லாம் எனக்கு உன் குரல்
தானடி
என் உயிர் நாடி இருக்கும் வரை
பெண்ணே
என்னோடு நீ இருபாய்
கண்ணே
உன்னை வருடாத நாள் இல்லை
உன்னை காதோடு உரசாத
நொடி இல்லை
அட
நீ இல்லாமல் நானே இல்லை
என்னோடு கலந்து
என் செல்லுக்குள் புகுந்து விட்ட

என் செல்போனே
என் காதலியே!!





DOCTORS SPECIAL
this poem especially for medicos..all docs jus read and have fun.


ஓரு காதல் நோயாளி
காதல் FORMULA வில் பறக்கும் SCHUMACHER நான்
என் இதய துடிப்புகளின் PACEMAKER நீ
உன் பார்வை ஆயுதத்தில் வீழ்ந்த HIROSHIMA நான்
என்னை துண்டுதுண்டாக்கிய CARCINOMA நீ
நம் இதயத்தை இணைக்க பாயும் INTERCITY நான்
என் ELECTROLYTESயை எகிற வைக்கும் ELECTRICITY நீ
நீ என் அழகிய ARRHYTHMIA!!
என்னை மெதுவாய் கொல்லும் ANEMIA!!
நீ நெருங்கினால் எனக்குள் TACHYCARDIA
விலகினால் வந்துவிடும் BRADYCARDIA
ECG அறியாத என் இதய துடிப்புகளை
EASY ஆக சொல்லிடும் என் இனிய காதலி நீ
மூச்சினில் புரையேறி
மூச்சடைத்து போவது போல்
நீ என் கண்ணுக்குள் புரையாகி
கருவிழியை அடைத்துவிட்டாய்
கண்ணே நீ என்ன CARROTஆ?BEETROOT ஆ?
இல்லை என் விழி மறைத்த CATARACTஆ?
கண்ணுக்குள் ஊடுருவி இதயத்தை அடைத்துவிட்டாய்
என் இதயத்தில் AS,PS,MS என்று நீளும்
கண்ணே நீ என் Mrs.ஆகும் வரை!

Saturday, August 19, 2006

NATURE POEMS

this is full of poems about nature..have a look.

1.எங்கே அவள்?
IN SEARCH OF MY GAL...
சுடும் வெயில்
வியர்வை அருவி
நெடுஞ்சாலை
மக்கள் கூட்டம்
காதை பிளக்கும்
வாகன சத்தம்
இது
என் நகர வாழ்க்கை
அவளைத் தொலைத்ததால்
நகரும்
நரக வாழ்க்கை!


காட்டுக்குள் சென்றேன்
என் காதலியைத் தேடி!


மலை முகடு...
அதை உரசிச் செல்லும் மேகக்கூட்டம்
மேகக்கூட்டத்தில்...அவள்


புல்வெளி..
புல்லின் மீது கீரிடமாய் பனித்துளி
பனித்துளியில் அவள்


காலைச்சூரியன்...
அவன் கரம் பட்டு சிவக்கும் செவ்வானம்
செவ்வானத்தில் அவள்


காட்டு அருவி
அவன் பாறையுடன் மோதுகையில் தெறிக்கும் சாரல்
சாரலில்...அவள்


உறையும் பனி
அதில் யாரும் அறியாமல் காதை வருடும் தென்றல்
தென்றலில்...அவள்


கார்மேகம்
மழையாய் பூமியைத் தொட தவிக்கையில் எழும் மண்வாசனை
மண்வாசனையில் அவள்


அழகிய பூக்கள்
அதோடு வண்டுகள் பேசும் காதல் வசனம்
காதல் வசனத்தில்...அவள்!


ஒற்றையடிப்பாதை
அங்கே அழைப்புமணியாய் குயிலோசை
குயிலோசையில்...அவள்


எங்கும் அவள்
பச்சைப்பட்டு உடுத்தி
என்னைப் பார்த்து
பரவசமாய் சிரித்தாள்
என் காதலியின்
கரம் பற்றாமல்
கண்ணீரோடு
காட்டைவிட்டு பிரிந்தேன்
என் நகர வாழ்க்கை நோக்கி

என் மனதில்
அவள் நினைவுகள்
கண்மூடினால்
கண் சிமிட்டுகிறாள் அவள்
என் காதலி-இயற்கை















2.AT THE END OF THE DAY-I MET HER


அந்தி வேலைப் பொழுது
அலுவல் முடிவு
அயர்ந்த உடலில்
வியர்வை பூக்கள்
படிகளில் தொங்கியே பல்லவன் பயணம்
முரட்டு வாகனம்
மிரட்டும் சாலையில்
மூக்கை உரசியது
அவள் வாசனை
அண்ணாந்து பார்த்தேன்
கரிய கூந்தலுடன்
என் இனிய காதலி
மெல்ல குனிந்து
முத்தங்கள் பொழிந்தாள்
என்னைத் தீண்டிய
என் செல்ல மழையே

Tuesday, August 15, 2006

my mosted wanted favourites

vivek oberoiதேவதையின் காதலன்



i wrote this long back during tsunami time.vivek did a great job in adopting those villages.this poem maynt suit at this time..anyway jus have a look at it.


மனித நேயப் போர்வையில் நடிக்கும்
மனிதர்கள் மத்தியில்
நடிகன் நீ
மனிதனாய் வாழ்கிறாய்


ஊர் தெரியாது மொழி தெரியாது
ஏன்
உன்னையே தெரியாது பலருக்கு
நீயோ
உணர்வுகள் தெரிந்து
உயிர் ஊட்டுகிறாய்

ஒருவர் ஒருவரைத் தத்தெடுக்கலாம்
நீயோ ஊரையே தத்தெடுக்கிறாய்

ஐஸ்வர்யா ராய் ஐஸ்கீரிம் தேவதை
கண்மூடினால் வரும் கனவு தேவதை
தேவதைக் கிடைக்க
வரம் பெற வேண்டும்


இங்கு தேவதையே
வரம் பெற்றிருக்கிறாள்
நீ காதலனாய் கிடைப்பதற்கு!







SANIA MIRZA-so chweet

குட்டி புயலே சானியா
எங்கும் உந்தன் mania
நீ ultra modern ராணியா இல்லை
ஆளை நொறுக்கும் சுனாமியா??
மூக்குத்தி போட்ட madonna நீ
மோதிப் பார்த்தால் maradonna நீ
கலக்கலான cocacola நீ
கலக்கிப்புட்ட எங்க இதயத்தை நீ
hyderabad halwa நீ
high tech ஆன rasagula நீ
வானத்தை பிடிக்கும் ஜெட்டா நீ
எப்படி பிடித்தாய் rankயை நீ

twinkle twinlke little star
நீ தான் எங்க super star